கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா.

X
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் 52-ஆம் ஆண்டு தேர்த்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தின் முன்பு கொடி கம்பத்தில் கொடி ஏற்றபட்டது. இதில் பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை குருத்துவ கல்லூரி பேராசிரியர் சகாயராஜ் மந்திரித்து ஏற்றி வைத்தார். இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் இந்த தேர்த்திருவிழா நிறைவுநாளின் போது, பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது.
Next Story

