கரூர் -பெண் குரல் போல் உள்ள மாணவரை பள்ளி ஆசிரியர் சீண்டுவதாக புகார்.
கரூர் -பெண் குரல் போல் உள்ள மாணவரை பள்ளி ஆசிரியர் சீண்டுவதாக புகார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது . கரூரை அடுத்த மாயனூர் அருகில் உள்ள வளையல்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நாகராஜன் பொதுமக்கள் குறை தீர் கூட்டத்தில் அளித்த மனுவில் தனது குரல் பெண் குரல் போல் உள்ளது எனவே அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியரான செந்தில்குமார் ஆபாசமாக பேசுவதாகவும் மற்றும் தொடக்கூடாத இடத்தில் தொடுவதாகவும் இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. இது குறித்து புகார் கொடுத்தால் என் மீது வீண் பழி சுமத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றி விடுவேன் என மிரட்டுகிறார். நான் பள்ளியின் அவமானம் என்றும் கூறுகிறார். எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
Next Story




