தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற 08.07.2025 அன்று காலை 11.00 மணியளவில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, மேற்காணும் குறைதீர்ப்பு கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் மற்றும் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story

