உஜ்ஜயினி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

X
ஸ்ரீ உஜ்ஜயினி காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது, மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா அந்தனேரி கண்மாய்க்கரை, காட்டுநாயக்கன் பழங்குடியினர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட 75 வருட பழமை வாய்ந்த திருக்கோவில், அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜயினி காளியம்மன் திருக்கோவில் 5ம் முறை திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி புனராவர்த்தன அஷ்டபந்தன மகா விமான கும்பாபிஷேகம் கிராமத் தலைவர் அய்யப்பன், துணை தலைவர் பூமிராஜ், பொருளாளர் இயேசு ஆகியோர் தலைமையிலும், ஊர் 5 மரியாதைக்காரர்கள் முதல் மரியாதை சின்ன வையாபுரி வகையறா, இரண்டாம் மரியாதை சண்முகம் பூசாரி வகையறா, மூன்றாம் மரியாதை ஆண்டி வகையறா, நான்காம் மரியாதை அய்யாவு வகையறா, ஐந்தாம் மரியாதை ராமசாமி வகையறா ஆகியோர் முன்னிலையில், சிவாச்சாரியார் நற்பவி சங்கர் கணேச சிவம் வேத மந்திரங்கள் முழங்க எடுத்துவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் இன்று (ஜூலை.7) நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதி, திருப்பாலை காவல் நிலைய ஆய்வாளர், பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துக்குமாரி ஆழ்வார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரெங்கம்மாள் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது, இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிராம கமிட்டி பொறுப்பாளர்கள் சின்னப்பாண்டி, சோலையப்பன், அசோக், மாயாண்டி அழகு பாண்டி மற்றும் காட்டுநாயக்கன் பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், அஜந்தா காளி கபாடி குழு நண்பர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்,
Next Story

