குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
X
குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் குறிஞ்சிப்பாடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story