கடலூர்: காவலர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

X
கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர்கள், கடலூர் உட்கோட்ட காவலர்களுக்கு, SRJ காவலர் நல திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS மருத்துவ சிகிச்சை முகாமில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். தொடர்ந்து ஆயுதப்படை காவலர்கள் மற்றும் கடலூர் உட்கோட்ட காவலர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றனர். மருத்துவ பரிசோதனையில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இ.சி.சி பரிசோதனை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை மருத்துவர் டாக்டர். சாதனா தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் அப்பண்டராஜ், பாலாஜி மருத்துவமனை நிர்வாகிகள் பிரதீப், அபிஷேக் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story

