உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை அருகே மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடியால் பரபரப்பு...

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை அருகே மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடியால் பரபரப்பு...
X
சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர்
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை அருகே மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடியால் பரபரப்பு... நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் உள்ள பழைய கார்டன் குடியிருப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கரடி உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கையாகவே உள்ளது. இந்நிலையில் இன்று மாலை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி செடிகள் வளர்க்கப்பட்ட வரும் கண்ணாடி மாளிகை அருகே உள்ள மரத்தின் மீது கரடி ஒன்று அமர்ந்திருந்தது. இதனை பூங்காவில் பணி புரியும் ஊழியர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் அப்பகுதியில் வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரியும் அரசு தாவரவியல் பூங்காவில் கரடி நடமாட்டம் உள்ளதால் உடனடியாக அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Next Story