பட்டா கொடுத்தீங்களே வீடு எப்போ கட்டி தர போறீங்க கனமழை பெய்யும் முன்பு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் ..........
பட்டா கொடுத்தீங்களே வீடு எப்போ கட்டி தர போறீங்க கனமழை பெய்யும் முன்பு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியிடம் மனு.. .......... குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கடந்த 2022ல் தங்களுக்கு அரசாங்கம் சார்பில் பட்டா வழங்கப்பட்டது எனவும் தங்கள் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசாங்கம் சார்பில் மாற்று இடம் தருவதாக கூறி தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர். மேலும் தாங்கள் தற்போது இருக்கும் பகுதியில் மழை பெய்தால் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாகவும் இரவு நேரங்களில் பெரிதும் அச்சம் உடனே உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு தங்களுக்கு உடனடியாக வீட்டுமனை கட்டி தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Next Story



