கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
கிராம நிலத்தை கையகப்படுத்தி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறி அஜ்ஜூர் கிராமத்து காப்பாற்றுங்கள் என பதாகைகளை கையில் ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு......................... நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கக்குச்சி பஞ்சாயத்து உட்பட்ட அஜ்ஜுர் கிராமத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட வனத்துறையினர் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு வன சட்டம் 1882 ன் பிரிவு 68 A உட்பட வனத்துறை திருத்த சட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு வன நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதிகளின் கீழ் தங்களின் கிராமத்தில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகளை காலி செய்து காப்புக்காக மாற்றப்படும் திட்டம் வகுத்துள்ளதாக கூறி வனத்துறையினர் கிராம மக்களை காலி செய்ய வேண்டும் என கூறி வருவதாகவும், எனவே வனத்துறையால் கிராம நிலம் மற்றும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டும், நிலம் பட்டாக்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அஜ்ஜுர் கிராமத்தை காப்பாற்றுங்கள் என பதாகைகளை கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவியா தண்ணீரும் அவர்களிடம் மனு அளித்தனர். பேட்டி: கல்பனா, ஜெயராஜ், கிராம மக்கள்
Next Story



