பேராசியர் அன்பழகன் விருது பெற்ற அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு 

பேராசியர் அன்பழகன் விருது பெற்ற அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு 
X
பாராட்டு
பேராசிரியர் அன்பழகன் விருது பெற்ற பள்ளிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, 2024-25 ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என்.நேரு ஆகியோர் இந்த விருதை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.  இந்நிலையில், திங்கட்கிழமை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பேராசியர் அன்பழகன் விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டிப் பேசினார்.  அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் த.மேனகா பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள விருதை சட்டமன்ற உறுப்பினரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார்.  நிகழ்ச்சியில், முன்னாள் தலைமையாசிரியர் தனலெட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப.சேகர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி, துணைத் தலைவர் வி.சத்தியசீலன், உதவி தலைமை ஆசிரியர்கள் எம்.காளீஸ்வரி,  டி.புவனேஸ்வரி, ப.லட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story