பர்கூர் அருகே தலை மீது தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர்அருகே உள்ள காரகுப்பம் ஊராட்சி பையன் கொட்டாய் கிராமத்தில் வீரபத்ரசாமி கோவில் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை வீரபத்ர சாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை வீரபத்ரசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்குபூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கபட்டது. பின்னர் ஏராளமான பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

