மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

X
ரிஷிவந்தியம் அடுத்த பேரால் கிராமத்தில் உள்ள பெரிய முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், மாரியம்மன் திருவிளையாடல், சுவாமி வீதியுலா, ஊரணி பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை நடந்த தேர்திருவிழாவில் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். விழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
Next Story

