இளம்பெண்ணிடம் அத்து மீறிய மத போதகர் கைது

X
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லை. அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சில மாதங்களும் முன்பு அவரது தாயார் வீட்டுக்கு சென்று தங்கி உள்ளார். அப்போது உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு சென்றுள்ளார். சபை போதகர் ரெஜிமோன் (43) என்பவர் இளம்பண்ணின் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய பெற்றோர் மகளை மட்டும் ஜெபம் செய்ய அனுப்பியுள்ளனர். அந்த நேரத்தில் போதகர் ரெஜிமோன் திடீரென கட்டி பிடித்து பலகாரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் போதகரின் பிடியிலிருந்து தப்பித்து வெளியே ஓடி வந்துள்ளார். பிறகு நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூற அவர்கள் தக்கலை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ரெஜிமோனை நேற்று கைது செய்தனர்.
Next Story

