கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

X
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அச்சுதா பள்ளி அருகே உள்ள கிணற்றில் ஒரு ஆண் விழுந்து விட்டதாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் அறிந்த தீயணைப்புத் துறையினர் உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீயணைப் போர் புகழேந்தி குழுவினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு குழுவினர்கள் சுமார் 30 நிமிடத்திற்கு மேல் போராடி மீட்டனர். அவர் மன்மதன் என்பவரின் மகன் கண்ணன் வயது 45 மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காதர் முகைதீன் இடம் ஒப்படைத்தனர். அவர் உடலை உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
Next Story

