திருப்பத்தூர் நிலாஅலவையர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் நிலாஅலவையர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X
திருப்பத்தூர் நிலாஅலவையர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் அரசாணை 420யை திரும்ப பெற வலியுறுத்தியும், நில அளவை துறையையில் வெளியாட்களை பணியமர்த்தும் முடிவை திரும்ப பெறுக என ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆர்ப்பாட்டம்* திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணை எண் 297யை ரத்து செய்ய வேண்டும், 3 ஆண்டுகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணை எண் 420யை திரும்ப பெற வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முரளிவாணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு ஜிஎஸ்டி விதித்ததை திரும்ப பெற வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.‌ இதில் மாவட்ட இணை செயலாளர் அசோக்குமார் வரவேற்புரை ஆற்றினார். கோட்ட தலைவர் பனிமலர், மாவட்ட துணை தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை வட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் திருமால், பிரேம்குமார், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
Next Story