கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே காதல் ஜோடிக்கு சண்டை – போலீசார் விசாரணை !

X
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, இளம் காதல் ஜோடி பொதுமக்கள் முன்னிலையில் நேற்று மாலை சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் மாறி வாலிபர் ஓடியதால், அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் இருவரையும் தடுத்து விசாரணை நடத்தினர். வடவள்ளியை சேர்ந்த பெண்ணை, திருப்பூர் அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் திருமணம் செய்வதாகக் கூறி கடந்த 9 மாதங்களாக தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருந்ததாக பெண் புகார் கூறியுள்ளார். இருவரும் பந்தய சாலை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story

