கோவை: பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி கழிவறையில் மாணவி மரணம் - போலீசார் விசாரணை !

X
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் முதுகலை பயிலும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பவபூரணி (28) என்ற மாணவி, விடுதி வளாகத்தின் கழிவறையில் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். நீண்ட நேரமாக வெளியே வராததால் மற்ற மாணவிகள் கதவை தட்டியும் திறக்காமல் இருந்ததால், நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் கதவை உடைத்துப் பார்த்த போது, மாணவி பிணமாகக் கிடந்தார். பீளமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தற்கொலைதா, உடல்நலக் காரணமா என தெரியவில்லை என்றும், மர்மம் நீங்க விசாரணை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தனர்.
Next Story

