இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா, விசிகவினர் பங்கேற்பு

X
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியம் கோழியாளம் கிராமத்தில் உள்ள திராவிட மணி தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 166- ஆவது பிறந்தநாள் விழா விசிக கட்சியில் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தயாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில்சிறப்புஅழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, தேர்தல் பணிக்குழு விடுதலைச் செழியன், முன்னாள் மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், மாவட்ட செயலாளர் காஞ்சி தமிழினி ஆகியோர் கலந்து கொண்டு தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது நினைவுத்தூணில் மலர்வளையம் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் தென்னவன், எழிலரசு, ராஜ்கு மார், கலைக் கதிரவன், பேரறிவாளன் விஜயகுமார், வேலவன், பார்த்தசாரதி, சாரங்கன் செல்வம்,வினோத், பன்னீர்செல்வம், கதிர்வாணன், கார்வேந்தன், கிட்டு பிரபாகரன், முருகவேல், மதன், வெங்கடேசன், தலித்எழில்மலை, மகா தேவன், மாசி மணிகண்டன், அஜித் குமார், ராஜேஷ், அருள்உள்ளிட்ட விசிக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

