கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்
X
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கௌரிசங்கர் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் நவ மணிகண்டன் முன்னிலை வகித்தார். இதில், வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 3 ஆண்டுகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்பு பட்டை அணிந்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் கண்ணபிரான், கோட்ட தலைவர் சந்திரகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் விஜய் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story