சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

X
தமிழ்நாடு கிராம பகுதி சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் சாந்தா, லதா ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் செந்தாமலர், உஷாராணி, லோகநாயகி, பிற சங்க நிர்வாகிகள் வெங்கிடு, தங்கராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினர். இதில், கிராமப்புற சுகாதார செவிலியர்களின் காலி துணை மைய பணியிடங்களை நிபந்தனை இன்றி நிரப்ப வேண்டும். அப்பணியில் பயிற்சி பெற்று பணிக்காக காத்துள்ள கிராம சுகாதார செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும். தடுப்பூசி பணிகளை தனியார் மயமாக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவுகளை திரும்ப பெற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
Next Story

