விடுதி மாடியில் மர்மமான முறையில் வாலிபர் உயிரிழப்பு

X
தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த செல்வகுமார் என்ற நபர் மொட்டை மாடியில் படுத்திருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழப்பு வடபாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள பி எஸ் கே காம்ப்ளக்ஸ் என்ற தனியார் தங்கும் விடுதியில் தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக தனியாக கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கி வந்துள்ளார் செல்வகுமார் இரும்பு வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வகுமார் அளவுக்கு அதிகமாக மது அருந்துவார் என்று கூறப்படும் நிலையில் நேற்று இரவு தனது அறைக்கு வெளியே மொட்டை மாடி பகுதியில் படுத்து இருந்துள்ளார் ஆனால் காலையில் அவர் தூக்கத்திலிருந்து எந்திரிக்காத நிலையில் விடுதியில் இருந்த மற்ற நபர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளனர் அப்போது அவர் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விடுதி உரிமையாளர் வடபாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வகுமார் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா அல்லது மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

