உறவினருக்கு ஆயுள் தண்டனை

உறவினருக்கு ஆயுள் தண்டனை
X
விவசாயி அடித்துக் கொலை செய்த வழக்கில் உறவினருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு அருகே விவசாயியை அடித்துக் கொலை செய்த வழக்கில் உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு பழனிமலை 2வது வீதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜன் (59). இவரது உறவினர் ஈரோடு சின்னியம்பாளையம் கேட்டுபுததூர் தாசன்காட்டு தோட்டத்தை சேர்ந்த மோகன் (52). கோவிந்தராஜனுக்கும், மோகனுக்கும் வழித்தட பிரச்சினை இருந்து வந்தது. இதில் கடந்த 2020ம் ஆண்டில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், கோவிந்தராஜனை, மோகன் கல்லால் தாக்கியிருந்தார். இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து மோகன் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி (47) ஆகியோர் மீது மொடக்குறிச்சி போலீசார் கொலை வழக்குப்பதிந்து, கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடித்து நீதிபதி எழில் நேற்று தீர்ப்பளித்தார். அதில், கோவிந்தராஜனை கொலை செய்த மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000ம் அபராதமும், மோகனின் மனைவி உமா மகேஸ்வரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தண்டனை பெற்ற மோகன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story