சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை : ஆட்சியருக்கு கோரிக்கை

X
சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சிவஞானபுரம் கிராமத்தில் சீரான குடிநீர் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சிவஞான புரம் கிராமத்தில் ஊராட்சியால் வழங்கப்படும் தண்ணீர் வழங்கபடவில்லை. சுமார் நான்கு நாட்களாக பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்த பகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்திற்கு மின்சாரமானது புதுக்கோட்டை மின் பகிர்மானத்தில் உள்ளது. மேற்கண்ட குடிநீர் ஏற்றும் நிலையத்திற்கு அளிக்கப்படும் மின்சார வழித்தடத்தில் உள்ள மின் வயர்கள் தொய்ந்து போய் காற்றினால் ஒன்றோடொன்று உராய்ந்து அடிக்கடி இந்த குடிநீர் ஏற்றும் நிலையத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. கடந்த நான்கு நாள்களாக மேற்கண்ட பிரச்சனை உள்ளதால் நீரேற்றும் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி ல்லாமல் சுமார் 4 நாட்களாக ஊராட்சி மக்களுக்கு தண்ணீர் வழங்கபடவில்லை. மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்கண்ட மின் வயர்களை சரி செய்து சுமார் 4 நாட்களாக தண்ணீர் வராமல் உள்ள சிவஞானபுரம் ஊர் மக்களுக்கு குடி தண்ணீர் வழங்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேர்வைக்காரன்மடம் ஊராட்சி முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

