ஈரோடு மருத்துவரின் ஆராய்ச்சி அங்கீகரிக்கப்பட்டது

X
ஒன்றிணைந்த ஐரோப்பிய நாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் கருவாக்க மருத்துவர்களின் மாநாடு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், உலகின் பல பகுதிகளிலிருந்து கருவாக்க நிபுணர்கள் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டில் ஈரோடு மருத்துவர், மாருதி மெடிக்கல் சென்டர் மற்றும் ஜெனிசிஸ் ஐவிஎப் அதி நவீன கருத்தரித்தல் மையத்தின் தலைமை மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ஸ்ரீ ரேவதி சதாசிவம் பங்கேற்று, அவருடைய ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து சிறப்புரையாற்றினார். இந்தியாவிலிருந்து அனுமதிக்கப்பட்ட ஓரிரு ஆய்வு கட்டுரைகளில், ஈரோடு மருத்துவரின் ஆராய்ச்சி அங்கீகரிக்கப்பட்டது. இவரது ஆராய்ச்சி வயது முதிர்ந்த பெண்களின் கருத்தரித்தல் தன்மையை அதிகப்படுத்தும் புதிய அதிநவீன சிகிச்சை முறையை பற்றியதாகும். இயல்பான கருத்தரிக்கும் வயதை இழந்த மற்றும் வழக்கமான துணைசெய் கருத்தரிப்பு மருத்துவத்தில் பலமுறை தோல்வியுற்ற தம்பதியருக்கு இந்த ஆராய்ச்சியும் அது சார்ந்த மருத்துவமும் ஒரு வரப்பிரசாதமாகும். உலகெங்கிலும் இருந்து வந்து மாநாட்டில் பங்கேற்ற கருவாக்க மருத்துவ நிபுணர்குழு டாக்டர் .ஸ்ரீ ரேவதி சதாசிவம் ஆராய்ச்சியை முழுமையாக அங்கீகரித்ததுடன், மற்ற பல கருவாக்க மருத்துவ சமுதாயம் கற்று பலன் பெறும் வகையில் இந்தக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு கருத்தரங்கின் இணையதளத்தில் நிரந்தர ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளில் மிக சிறந்த படைப்புகள் மட்டுமே கருத்தரங்கின் வலைதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சதனையை பல இந்திய மகப்பேறு மற்றும் கருவாக்க மருத்துவர்கள், கருவாக்க தொழில் நுட்ப கலைஞர்களும் சேர்ந்து பாராட்டு விழா எடுத்து சிறப்பித்தனர். . இவ்விழாவில் ஈரோடு மற்றும் சென்னை சேர்ந்த பல மூத்த மருத்துவர்கள் கலந்து பாராட்டி சிறப்பித்தனர்.
Next Story

