சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு

X
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகளை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று 8/7/2025 கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும்,18 வயது குறைவான குழந்தைகள் மோட்டார் வாகனங்களை இயக்க கூடாது எனவும் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் எனவும், தயவுசெய்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் எனவும் "No Helmet No Entry " குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Next Story

