ஹோலா கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி இருவர் கைது

X
திருப்பத்தூர் மாவட்டம் ஹோலா கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக போலியான பணியாணை வழங்கி 56 நபரிடம் 22 லட்சம் மோசடி! பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றிய இருவரை பிடித்து எஸ்.பி. அலுவலகத்தில் ஒப்படைப்பு! வாலிபர்கள் 2 பேர் கைது* கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் ஹோலா கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மனோ (29 )மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சதீஷ்(40) ஆகிய இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 56 நபர்களிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்து ஜோலா கம்பெனியில் பணி செய்வதுபோல இவர்களே போலியாக பணியானை தயார் செய்து 56 நபரிடம் கொடுத்துள்ளனர் இதனை நம்பிய அனைவரும் அந்த கம்பெனிக்கு வேலைக்கு சென்றனர் அப்போது அந்தப் பணி அணையை நாங்கள் தரவில்லை என கம்பெனியில் கூறியதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அனைவரும் இந்த இரண்டு நபர்களை நைசாக பேசி திருப்பத்தூர் வரவழைத்தனர். அதன் பின்பு இருவரையும் பிடித்து திருப்பத்தூர் எஸ் பி அலுவலகத்தில் இருவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்து ஒப்படைத்தனர் அதன்பின்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் கந்திலி போலீசார் மோசடி ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். மேலும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் சிறையில் அடைத்தனர். 56 நபர்களிடம் ஹோலா கம்பெனியில் பணி வாங்கி தருவதாக போலியாக பணி அணை செய்து 22 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story

