புகலூர்- காரை வேகமாக ஓட்டியதால் விபத்து மனைவி குழந்தைகள் படுகாயம்.

புகலூர்- காரை வேகமாக ஓட்டியதால் விபத்து மனைவி குழந்தைகள் படுகாயம்.
புகலூர்- காரை வேகமாக ஓட்டியதால் விபத்து மனைவி குழந்தைகள் படுகாயம். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 38. இவரது மனைவி மணிமேகலை வயது 33.மகள் அக்சரா வயது 08, மகன் ஆதிரன் வயது 5. இவர்கள் அனைவரும் நேற்று மதியம் 2:20 மணியளவில் கரூர் - சேலம் சாலையில் அவரது காரில் சென்றனர். இவர்களது கார் புகலூர் வாய்க்கால் பாலம் அருகே வந்த போது காரை வேகமாக ஓட்டியதால் சாலையோரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிமேகலை அக்சரா ஆதிரன் மூவரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நேரடியாக பார்த்த புகலூர் கூலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா அளித்த புகாரில் காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story