திருப்பரங்குன்றத்தில் அமைச்சர்கள் ஆய்வு

மதுரை திருப்பரங்குன்றத்தில் வரும் ஜூலை 14 ல் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அமைச்சர்கள் இன்று ஆய்வு பணியை மேற்கொண்டனர்
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் வருகிற (ஜூலை.14) திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உள்ளிட்டோர் இன்று ( ஜூலை.8)ஆய்வு மேற்கொண்டனர் அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்: ஆன்மீக ஆட்சியாக, பக்தி மனம் கமழ்கின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்கின்றோம் முதல்வர் நடத்துகிறார்.
Next Story