கீழப்பாவூரில் பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் பேரூராட்சி 2வது வார்டு கோட்டையூர் பகுதியில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ. 6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை வகித்து, திறந்து வைத்தார். துணைத் தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

