ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

X
Komarapalayam King 24x7 |8 July 2025 8:49 PM ISTகுமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் முதல்வர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. விஜயகுமார் பேசியதாவது: “இன்றைய இளைஞர்கள் பலர் அறிந்தோ அறியாமலோ போதைப் பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இது அவர்களது உடல்நலம், மனநலம், கல்வி, வேலை வாய்ப்பு, குடும்பம் அனைத்தையும் அழிக்கும். போதைப்பொருட்கள் உடலின் நரம்புகளைத் தாக்கி, மன அழுத்தம், அசதி, தற்கொலை எண்ணங்கள், சட்டவிரோத செயல்கள் என வாழ்க்கையைத் தகர்க்கின்றன. மாணவர்கள் உயர்ந்த இலக்குகளுடன் சமூக நலனுக்காக வாழவேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர் என ஒவ்வொருவரும் விழித்திருத்தல் வேண்டும். மாணவர்கள் ஆரோக்கிய வாழ்வு மேற்கொள்ளும் விதமாக நம்மிடம் இருந்து நல்வழிகாட்டுதலாக இருக்கவேண்டும். போதை இல்லா சமுதாயம் உருவாக, நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஊமை நாடகம், மற்றும் அடிமை என்ற குறும்படம் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஜே.கே.கே. முனிராஜா மருந்தியல் கல்லூரி, தமிழ் சிந்தனை பேரவை சார்பில் முகாம் நடத்தப்பட்டது.
Next Story
