மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
X
மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார் ‌.
வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைய முடியாமல் நிறைய பெண்கள் உள்ளனர்.இதையடுத்து, தமிழக அரசு புதிய வரையறை கொண்டு வந்தது. புதிதாக விண்ணப்பிக்க உள்ள மகளிர்களுக்கு வருகிற 15ஆம் தேதி அன்று முதல் நடைபெறவுள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story