அரசு பேருந்தின் படிக்கட்டில் சிக்கிய வேட்டியால் இழுத்து செல்லப்பட்ட கட்டிட மேஸ்திரி படுகாயம்

X
Komarapalayam King 24x7 |8 July 2025 9:06 PM ISTகுமாரபாளையம் அரசு பேருந்தின் படிக்கட்டில் சிக்கிய வேட்டியால் இழுத்து செல்லப்பட்ட கட்டிட மேஸ்திரி படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி, 70. கட்டிட மேஸ்திரி. நேற்றுமுன்தினம் மாலை 05:45 மணியளவில், இவர் தனது சுசுகி அக்செஸ் டூவீலரில், குமாரபாளையம் நகரில், பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்செங்கோடு செல்லும் 8 என்ற எண் கொண்ட அரசு பேருந்து, இவர் மீது மோத, நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பழனிசாமியின் வேட்டி, பேருந்தின் படிக்கட்டில் சிக்கி, இவரை சிறிது தூரம் இழுத்துக்கொண்டு சென்றது. இதனால் காலில் ரத்த காயங்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு, இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பேருந்து ஓட்டுனர் திருச்செங்கோடு, சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன், 50, என்பவரை கைது செய்தனர்.
Next Story
