குன்னூர் மேட்டுப்பாளைம் சாலையில் உலாவும் கொம்பன் யானை – வனத்துறையின் எச்சரிக்கை

குன்னூர் மேட்டுப்பாளைம் சாலையில் உலாவும் கொம்பன் யானை – வனத்துறையின் எச்சரிக்கை
X
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை கொம்பன் யானை ஒன்று தொடர்ந்து உளாவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் மேட்டுப்பாளைம் சாலையில் உலாவும் கொம்பன் யானை – வனத்துறையின் எச்சரிக்கை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை கொம்பன் யானை ஒன்று தொடர்ந்து உளாவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த யானை, பொதுவாகவே “கொம்பன் அழைக்கப்படுவதால், அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் இது ஒரு பரிச்சயமான நிகழ்வாக மாறிஉள்ளது.. யானையின் நடமாட்டம்: • சாலை அருகே தாழ்வான பகுதிகளில் இருந்து வெளிவந்து, இந்த யானை அதிகாலையிலோ அல்லது மாலை நேரங்களில் சாலையில் நடமாடுகிறது. • அண்மையில் இது சில வாகனங்களுக்கு அருகே வந்ததால் பயணிகள் மிகுந்த பதட்டத்துடன் பாதுகாப்பான இடங்களை நாடினர். • இது வழக்கம்போல காட்டிலிருந்து உணவு தேடி வந்துள்ளது .வனத்துறையின் எச்சரிக்கை: வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்: “கொம்பன் யானை மனிதர்களைத் தாக்கும் அபாயம் குறைவாக இருந்தாலும், இதுபோன்ற நேரங்களில் அதை சாலை வழியாகச் சந்திக்கும்போது பீதி மற்றும் சாலைக் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.” பொதுமக்களுக்கு ஆலோசனை: • அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மேட்டுப் பாலம் சாலை வழியாகப் பயணம் செய்யபவர்கள் எச்சரிக்கையுடன் கவனமா செல்லவும் • யானையை கண்டால் அருகே செல்லாமல், அமைதியாக வாகனத்தில் காத்திருந்து செல்லவும் • யானையை புகைப்படம் எடுக்க அல்லது சத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம். “வன உயிரினங்களுடன் ஒத்துழைப்பதே பாதுகாப்பு – பாதுகாப்பான பயணம்” என்பது இச்சம்பவத்தின் முக்கியப் பாடமாகும்.
Next Story