தஞ்சை அருகே ஸ்கூட்டி மீது பைக் மோதியதில் முதியவர் பலியானார்.

தஞ்சை அருகே ஸ்கூட்டி மீது பைக் மோதியதில் முதியவர் பலியானார்.
X
விபத்து
தஞ்சை காவிரி நகரை சேர்ந்தவர் திரவியச்செல்வன் (70). இவர் நேற்று முன் தினம் (7ம் தேதி) இரவு தன்னுடைய ஸ்கூட்டியில் தஞ்சையில் இருந்து திருக்கானூர்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் திருக்கானூர்பட்டியை சேர்ந்த ரஞ்சித்(21), மணிகண்டன்(20) ஆகியோர் ஒரு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.. அப்போது திரவியச்செல்வன் ஓட்டி சென்ற ஸ்கூட்டி மீது ரஞ்சித் ஓட்டிச் சென்ற பைக் வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய திரவியச்செல்வன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரவியச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே திரவியச்செல்வன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story