ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு  கூட்டம்
X
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் ஆரணி கோட்டாட்சியர் சிவா தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் புஷ்பா அனைவரையும் வரவேற்றார். ஆரணி வட்டாட்சியர் கௌரி அனைவரையும் வரவேற்றார். ஆரணி வட்டவழங்கல் அலுவலர் மூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளரும், வேளாண்மை உற்பத்திக்குழு உறுப்பினருமான கோ.எதிரொலிமணியன் பேசியது, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்காக தனியாக பட்ஜெட் அறிவித்தார். வரலாற்று சாதனையாக கடந்த 4 ஆண்டுகாலத்தில் விவசாயிகள் பதிவு செய்த இலவச மின் இணைப்புக்கு 3 லட்சம் பேருக்கு இலவச இணைப்பு கொடுத்துள்ளார். அந்தளவிற்கு விவசாயிகள் மீது அக்கறையுள்ள அரசாக நடைபெற்றது வருகிறது. விவசாயிகளை பொறுத்தவரையில் விளை நெற்களை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும், உரிய விலை கொடுக்க வேண்டும். மேலும் உங்கள் கோரிக்கைகளை கேளுங்கள். அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்று பேசினார். மேலும் இதில் விவசாயிகள் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி கோரினர். மேலும் சிலர் வங்கியில் கால்நடைகளுக்கான கடனுதவி அளிக்க மறுக்கிறார்கள் என்றும், ஆரணி அடுத்த தச்சூர் ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது என்றும், பட்டா சிட்டா வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர். பின்னர் ஆரணி கோட்டா்ட்சியர் சிவா பேசியது, விவசாயிகள் கொடுக்கும் மனுக்களை ஆன்லைனில் பதிவேற்றப்படும். இதுவரை இவ்வாறு செய்யப்படவில்லை. மேலும் விவசாயிகள் கொடுக்கும் மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அந்த விவசாயி அதே கோரிக்கை மனு கொடுக்காதவாறு செய்ய வேண்டும். மேலும் ஆன்லைனில் மனுக்களை பதிவேற்றினால் முதல்வரின் கவனத்திற்கு செல்லும். அந்த அளவிற்கு சிறப்பாக கூட்டத்தை நடத்த வேண்டும் நாங்கள் ஆலோசனை செய்து அனைத்து துறை அதிகாரிகளையும் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் கொடுத்த கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்தில் அந்தந்த துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். அதனையும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். என்று பேசினார். மேலும் இதில் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் பகுதி வேளாண்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்வதுறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, வங்கித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story