காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் கடலூர் எம்பி டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

செய்யாறில் நகர காங்கிரஸ் சார்பில் கடலூர் எம்பி டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாட்டப்பட்டது.
செய்யாறில் நகர காங்கிரஸ் சார்பில் கடலூர் எம்பி டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவரும் கடலூர் எம்பியுமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது . நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பிரசாத் தலைமை தாங்கினார். நகர தலைவர் வி.சந்துரு முன்னிலை வகித்தார். ஆரணி கூட்டு ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் 10 கிலோ கேக் வெட்டி கேக்கும், அன்னதானமும் வழங்கப்பட்டது மேலும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தில்லை , இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஹேமச்சந்திரன், செய்யாறு சட்டமன்ற தொகுதி தலைவர் குருமூர்த்தி, நகர இளைஞரணி தலைவர் பிரதீப், காங்கிரஸ் பிரமுகர்கள் ஜெயராமன், கலையரசன் வெங்கடேசன், பாபு, பீமன், சிங்காரவேலு, அமரேசன், கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி, ராஜவேல், அன்பு பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story