கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்

திருவாரூர்மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருக்கிறது ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்துகொண்டிருந்தபொழுது திடீரென ஒருபெண் தன்மீது மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார், பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி பாட்டிலை பிடுங்கியதுடன் உடம்பில் தண்ணீர் ஊற்றி அவரை ஆசுவாசப்படுத்தினர்.மேலும் அவரை விசாரித்த பொழுது அவர் கூத்தாநல்லூர் நன்னிமங்கலம் பகுதியை சேர்ந்த துரை என்பவரது மனைவி லஷ்மி வயது 45 என தெரியவந்தது. துரை சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார், மேலும் இவர்களுக்கு ஒரு பெண்ணும் மூன்று மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் தான் குடியிருக்கும் வீட்டில் 25 ஆண்டு காலமாக வசித்து வரும் நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த தனிநபர் தங்களுக்கு தெரியாமல் அந்த வீட்டை அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும் எங்களை வீட்டை விட்டு வெளியேறு என்று கூறுவதாகவும் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் பலனில்லாததால் தீக்குளிக்க வந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். பின்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அவருக்கு சிகிச்சை அளித்ததுடன் இதுபோல் செயல்களில் ஈடுபடக்கூடாது மீறி ஈடுபட்டால் சிறையில் அடைக்க நேரிடும் என எச்சரிக்கை செய்து அவரை அனுப்பிவைத்தனர். தீக்குளிக்க முயன்ற பெண்ணால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது .
Next Story