திருவாரூரில் முதல்வர் வருகையால் ட்ரோன்களுக்கு தடை

திருவாரூரில் முதல்வர் வருகையால் ட்ரோன்களுக்கு தடை
X
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி திருவாரூரில் ஜூலை 9, 10 ஆகிய 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை குறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, பிற்பகல் திருச்சியில் இருந்து காட்டூரில் உள்ள கலைஞா் கோட்டத்துக்கு வந்து, தங்கி ஓய்வெடுக்கிறாா்.பின்னா், மாலை காட்டூரில் இருந்து புறப்பட்டு, பவித்திரமாணிக்கம், துா்காலயா சாலை, தெற்கு வீதி,பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக ‘ரோடு ஷோ’ மூலம் மக்களை சந்திக்கிறாா்.தொடா்ந்து, மேம்பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறாா். ஜூலை 10- ஆம் தேதி காலை எஸ்எஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.முதல்வா் வருகையையொட்டி, முக்கிய விருந்தினா்கள் வரும் வழித்தடம் ‘ரெட் ஷோன்’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் ட்ரோன் கேமரா, ரிமோட் மூலம் இயங்கும் வான்வெளி சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
Next Story