தமிழ்நாடு துணை முதலமைச்சருக்கு குளித்தலையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு
கரூர் மாவட்டத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதற்காக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவரை குளித்தலை பேருந்து நிலையத்தில் மாவட்ட திமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் மாணிக்கம் தலைமையில் ஒன்றிய நகர மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். மேலும் இளைஞர் அணி சார்பில் மாலை மற்றும் வீரவாள் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குளித்தலை பேருந்து நிலையம் முதல் சுங்க கேட் வரை காரில் நின்றவாறு நடைபெற்ற ரோட் சோ நிகழ்ச்சியில் சாலையின் இரு புறம் நின்ற கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கைகுலுக்கியவாறும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலக ஆய்வு கூட்டத்திலும், கரூர் திருமா நிலையூரில் ரூபாய் 40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தும், 1000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், திமுக கட்சியின் சார்பில் இளைஞர் அணி மற்றும் பாக முகவர்களுடன் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்நிகழ்வில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், திமுக மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
Next Story






