ஓசூர் அருகே விஷம் குடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சாந்தி (12) அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த மக ளுக்கு பெற்றோர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டு வீட் டில் மயங்கிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர்.மீட்டு ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே மாணவி உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

