புளியங்குடி தர்மசாஸ்தா கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி சடையுடையார் தர்மசாஸ்தா கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. புளியங்குடியில் பிரசித்தி பெற்றசக்தி விநாயகர், பூர ணபுஷ்கலா சமேத சடையுடையார் தர்மசாஸ்தா கோயில் கும்பாபிஷேக விழா கடந்த கம்தேதி துவங்கியது. விழாவில் காலை 7மணிக்கு விநாயகர் பூஜை, 4ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி தீபாராதனை, சக்திவிநாயகர், கன்னி விநாயகர் கோபுரகல சங்கள், பூரண புஷ்கலா சமேத சடையுடையார் தர்ம சாஸ்தா மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு மகாகும் பாபிஷேகம், மகாஅபிஷே கம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தை புளியங்குடிலட்சுமிநரசிங் கபெருமாள்கோயில் அர்ச்சகர்சந்தோஷ்சாஸ்திரிகள் மற்றும் வேத விற்பன்னர் கள், கோயில் அர்ச்சகர் சந்திரசேகரன், பிரணாதத் ரிஹரன் நடத்திவைத்தனர். ஏற்பாடுகளை விழாக்கமிட்டியார் செய்திருந்தனர்.
Next Story

