கட்டிட காண்ட்ராக்டர் தற்கொலை

X
குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் சேவியர் ராஜ் (48). இவருக்கு அருள்ஜோதி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். சேவியர் ராஜ் கடந்த இரண்டு வருடங்களாக கேரளாவில் கட்டிடங்கள் கட்டும் ஒப்பந்தம் எடுத்து பணிபுரிந்து வந்தார். இதில் அதிக அளவில் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் மதுபழத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்த நிலையில் நேற்று சேவியர் ராஜ் வீட்டு சீலிங் ஃபேனில் நைலான் கயிறு மூலம் தூக்கு மாட்டி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சேவியர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அருள்ஜோதி இரணியல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

