குமரிக்கு தாமதமாக வந்த ரயில்கள்

குமரிக்கு தாமதமாக வந்த ரயில்கள்
X
பாலப் பணி
நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இதன் ஒரு கட்டமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலாக விளங்கும், ஊட்டுவாழ்மடத்தில் பழையாற்றின் மேல் உள்ள ரயில்வே பால கட்டுமான பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் காரணமாக, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் ரயில்களை உள் வாங்குவதில் தாமதம் ஏற்படுகின்றன. கடந்த 5ம்தேதி இந்த பணி காரணமாக, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாமதம் ஆனது. இந்த நிலையில் நேற்று இரவும், ஊட்டுவாழ்மடத்தில் பணிகள் நடந்தன. இந்த பணிகள் இன்று அதிகாலை வரை நீடித்தது. இதனால் இன்றும் நாகர்கோவில் வந்த சென்னை, கோவை ரயில்கள் தாமதம் ஆனது.  கன்னியாகுமரியில் நடக்கும் சூரிய உதயத்தை காண, இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் இன்று ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரிக்கு சென்றதால், சூரிய உதயத்தை காண முடியாமல், ரயிலில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தாமதம் காரணமாக பயணிகள் பாதிப்படைந்தனர்.
Next Story