கால்வாயில் விழுந்தவர் சடலமாக மீட்பு

X
குமரி மாவட்டம் திடல் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி தாஸ் (70). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் திடல் பகுதியில் செல்லும் தோவாளை சானல்கரையோரம் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அடித்த காற்றில் நிலை தடுமாறி சைக்கிளுடன் தோவாளை சானலில் தவறி தண்ணீரிலும் விழுந்துள்ளார். பொதுமக்களின் உதவியுடன் சானல் முழுவதும் தேடியும் கிடைக்காததால் நேற்று காலை அவரது மனைவி ஆபரண பாய் இது குறித்துபூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில்தேடினார்கள். அங்கிருந்து ெகாஞ்ச தூரத்தில் அந்தோணி தாஸ் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story

