ஆலங்குளம் அருகே அமைச்சர் சேகர்பாபு கோயில்களே ஆய்வு செய்தார்

ஆலங்குளம் அருகே அமைச்சர் சேகர்பாபு கோயில்களே ஆய்வு செய்தார்
X
அமைச்சர் சேகர்பாபு கோயில்களே ஆய்வு செய்தார்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலை பராமரித்து கும்பாபிசேகம் நடத்துவதற்காக கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நடைபெறாததால் பக்தர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கோயிலில் திடீர் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் கும்பாபிசேகம் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கிருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோயில் திருப்பணிகளை விரைந்து தொடங்கி 2 மாதங்களுக்குள் முடித்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.
Next Story