முத்துப்பேட்டை சாலையில் சேரங்குளம் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்

முத்துப்பேட்டை சாலையில் சேரங்குளம் பகுதியில் கொட்டப்படும்  குப்பைகள்
X
மன்னார்குடி சேரங்குளம் பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாாய நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேரங்குளம் மதகனை அருகே பாமணி ஆற்றங்கரையில் கடந்த பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக எளிதில் நோய்களை பரப்பும் இறைச்சி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த வழியாக மன்னார்குடி திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதிகளுக்கு இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. நள்ளிரவில் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இப்பகுதியில் இறைச்சி கடைகளில் சேகரிக்கப்படும் கோழி, மீன் உள்ளிட்ட கழிவுகளும் பிளாஸ்டிக்,மரங்கள், கழிவுகள் என மக்கிய குப்பைகள் கொட்டப்படுகிறது.தற்போது பருவம் தவறி பெய்யும் மழையால் நோய் தொற்று ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றி தூய்மைப்படுத்தவும் இவ்விடத்தில் வேறு குப்பைகளை கொட்டக்கூடாது என அறிவு பலகை பலகை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story