கொண்டை ஊசி வளைவில் சிரத்தை வாகன ஓட்டிகள் அச்சம்

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி தமிழகம் -கர்நாடகத்தை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து திம்பம் மலைக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கர்நாடகாவில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திம்பம் மலைப்பகுதி வழியாக சத்தியமங்கலம் வந்து அங்கிருந்து தமிழகம் செல்கின்றன. திம்பம் மலைப்பகுதியில் யானை, சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. அங்குள்ள தடுப்பு சுவரில் படுத்திருப்பதும், சாலையோரம் சுற்றி திரிவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதை 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே வாகன ஒட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தடுப்பு சுவர் ஒன்றின் மேல் சிறுத்தை படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வாகன ஓட்டின் வெளிச்சத்தைக் கண்டு தடுப்பு சுவரை படுத்திருந்த சிறுத்தை திடீரென எழுந்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த வாகன ஓட்டி மெதுவாக தனது வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். அங்கிருந்து எழுந்த சிறுத்தை சிறிது நேரம் சாலையோரம் நடந்து சென்று பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோரம் இல்ல தடுப்பு சுவரில் வந்து தஞ்சம் அடைந்து வருகிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றனர்.
Next Story

