வந்தே பாரத் ரயிலில் ஏசியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம்

X
நெல்லையிலிருந்து காலை 6:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 2 மணிக்கு சென்னையை சென்றடையும். இந்த நிலையில் இன்று காலை நெல்லையிலிருந்து ஆறு ஐந்து மணிக்கு கிளம்பிய வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் வந்தடைந்தது பின் திருச்சியை நோக்கி செல்லும்போது திண்டுக்கல் தாமரைப்பாடி அருகே ஏசியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பெட்டியின் உள்ளே புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ஏசியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்து பின் 30 நிமிடம் தாமதமாக கிளம்பி சென்றுள்ளது. தற்போது புகைமூட்டம் ஏற்பட்ட பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு பயணிகள் பயந்து வந்து வண்டியை நிறுத்த சொல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
Next Story

