ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாமை மேயர் துவங்கி வைத்தார்

ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாமை மேயர் துவங்கி வைத்தார்
X
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவங்கி வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொடங்கியது இந்த முகாமை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ரேபிஸ் வெறி நைஸ் தடுப்பூசி முகாம் இன்று துவங்கியுள்ளது. தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் தொடங்கிய ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாமை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் இதை தொடர்ந்து செல்ல பிராணிகள் வளர்க்க கூடியவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள நாய்களுக்கு ரேபிஸ் வெறி நாய் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் 1800203040 என்ற மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் நாய்கள் இருக்கும் பகுதிக்கு சென்று தடுப்பு ஊசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ்குமார் மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா உதவி ஆணையர் வெங்கட்ராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story