திமிரியில் உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் விண்ணப்பம் வினியோகம்

X
திமிரி பேரூராட்சியில் வருகிற 15-ந் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறுவதை முன்னிட்டு, 1 முதல் 8 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்ப படிவம் வழங்கப்படுவதை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் க.ஞானசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திமிரி பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ஜெயக்குமார், இளநிலை உதவியாளர் நவீன்குமார், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story

